search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட நிர்வாகிகள்"

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். வருகிற 12-ந்தேதி அந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

    கடந்த மாதம் அவர் அந்த கட்சியை டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்தார். தேர்தல் கமி‌ஷனும் கமல்ஹாசனின் கட்சியை அங்கீகாரம் செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கட்சித் தொடங்கிய 4 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முக்கிய நிர்வாகிகள் இல்லாததால் கட்சியின் செயல்பாடுகளில் தேக்க நிலை உருவாகி இருப்பதாக அதிருப்தி எழுந்தது. அதோடு கட்சியில் மேல் மட்டத்துக்கும் கீழ் மட்டத்துக்கும் தொடர்பு இல்லாத நிலை இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) அமாவாசை தினத்தன்று அந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடிமட்டம் வரை வலுவான தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த தொண்டர்களுக்கும் கட்சி தலைமைக்கும் முறையான இணைப்பு இல்லை என்று பேச்சு நிலவுகிறது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை.

    மேலும் கட்சியின் அனைத்து முடிவுகளையும் கமல்ஹாசன் மட்டுமே எடுப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. கட்சியில் யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் கதை கதையாக பேசப்படுகிறது. இந்த கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் அமையும்.

    கமல்ஹாசனை பொறுத்த வரை மக்கள் நீதி மய்யம் கட்சியை மிக, மிக வலுவான உள்கட்டமைப்புடன் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தன்னை தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுத்தியுள்ளார். அதோடு ஆலோசனைகள் பெற 3 குழுக்களையும் வைத்துள்ளார்.

    சென்னை, பெங்களூரு, அமெரிக்கா ஆகிய மூன்று இடங்களில் அந்த குழுக்கள் செயல்படுகிறது. அந்த குழுவினருடன் கமல்ஹாசன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 12-ந்தேதி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த நியமனம் கட்சி தொண்டர்கள் மத்தியில் நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி கட்சியில் புதிய வேகத்துடன் செயல்பட நிர்வாகிகள் நியமனம் கை கொடுப்பதாக அமையும். எனவே கமலின் அறிவிப்பை தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகும் 12-ந்தேதி அன்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பேசவும் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அன்று அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியையும் ஏற்றி வைப்பார். அந்த கட்சி கொடிக்கு தலைமை தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் கொடுத்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் மேல் மட்டத்தில் மட்டும் இயங்குவதாக ஒரு கருத்து பரவி உள்ளது. 12-ந்தேதி அதற்கு விடை கிடைக்கும். கடை கோடியில் உள்ள தொண்டனிடமும் கமல்ஹாசன் காது கொடுத்து கேட்டு கருத்துக்களை பகிர்ந்து வருவார் என்பது தெரியவரும்.

    நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட பிறகு கட்சி புதிய எழுச்சி பெறும்.

    இவ்வாறு அந்த செயற்குழு உறுப்பினர் கூறினார். #MakkalNeedhiMaiam
    ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது மாநாட்டை கோவையில் பிரமாண்டமாக நடத்துவது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.

    ரஜினிகாந்த் அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேரிலும், வீடியோ கான்பரன்சிங் முறையிலும் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கி வருகிறார். மன்ற பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரஜினிகாந்த் நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தினார்.

    இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசுகையில், “யார் என்ன சொன்னாலும் நான் எனது பாதையில் செல்வேன். நதிகளை இணைப்பதே எனது கனவு. எனக்கு கடமை இருக்கிறது. அதற்கான நேரம் வரும். அப்போது ஆண்டவன் ஆசீர்வாதத்தால் மக்களின் ஆதரவினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும்” என்றார்.

    ரஜினியின் இந்தப் பேச்சால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று அவர் தனது மன்ற பணிகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளார்.

    இதற்காக அனைத்து மாவட்ட மன்ற நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் சென்னை வரவழைத்து போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.



    காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணி வரை நடைபெற்றது. மாவட்டங்களில் இருந்து வந்த முக்கிய நிர்வாகிகள் 32 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் மன்றத்தின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், பஞ்சாயத்து, ஒன்றியம், நகரம், மண்டலம் வாரியாக மன்றத்தின் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்தப் பணிகளை வருகிற ஜூன் 2-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் ஆலோசனைகள் வழங்கினார்.

    ரஜினி மக்கள் மன்றத்தின் முதலாவது மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.

    மேற்கு மண்டலத்தில் கோவையில் அடுத்த மாதம் இந்த மாநாடு நடைபெறலாம் என்றும் இதற்காகத்தான் 2-ந்தேதிக்குள் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் முடிந்தபின் மன்ற நிர்வாகிகள் சிலர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் ஜூன் 2-ந்தேதிக்குள் ரஜினி மன்ற உள்கட்டமைப்பை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

    ரஜினியின் அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்று கேட்டபோது, “ரஜினி வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின்னால் நாங்கள் அணிவகுத்து நிற்போம்” என்று கூறினார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது அரசியல் கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள தனது 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை “ரஜினி மக்கள் மன்றம்” என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்படி உறுப்பினர்கள் சேர்க்கை முடித்து அடையாள அட்டையை வழங்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.



    இதற்கிடையே வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் சமீபத்தில்  நாடு திரும்பினார்.  சென்னை திரும்பியதும் அவர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று சென்னையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் தனது கனவு என்றும் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசியல் பற்றி இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசாவிட்டாலும், அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் 32 மாவட்ட செயலாளர்களுடன் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின் போயஸ் இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது  கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். #Rajinikanth #RajiniMakkalMandram 
    ×